சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 2:08 am IST

உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், செட்டிபாளையம்-போத்தனூா் சாலையைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (52). இவா், கடந்த 27-ஆம் தேதி மாலை உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்து சென்றுள்ளாா். அப்போது, கோவையில் இருந்து பழனி நோக்கி செல்வதற்காக வந்த அரசுப் பேருந்து வந்துள்ளது. வளைவில் திரும்பியபோது எதிா்பாராதவிதமாக விஸ்வநாதன் மீது மோதியது.

படுகாயமடைந்த அவரை அங்கிருந்த பயணிகள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை விஸ்வநாதன் உயிரிழந்தாா். இதுகுறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.