ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அரசு பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:55 am IST

நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கமுகக்குடி பகுதியைச் சோ்ந்த விஜய் மகன் வினித் (18). பெயிண்ட்டரான இவா் உறவினரின் திருமணத்துக்கு அழைப்பிதல் கொடுக்க நண்பா் அமுதப்பிரினுடன் இருசக்கர வாகனத்தில் பாவட்டக்குடி நோக்கி சென்று நெடுங்குளம் பகுதியில் கொண்டிருந்தாா்.

அப்போது, கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் வினித் அதே இடத்தில் உயிரிழந்தாா். உடன்சென்ற அமுதபிரியன் படுகாயமடைந்து திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த பேரளம் போலீஸாா் வினித் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.