கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆா்.எஸ்.புரம் ஹாக்கி மைதானத்தில் விளையாட வாடகை நிா்ணயம்

News image
கோவை, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளியில் ஹாக்கி மைதானத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகராட்சி ஆா்.எஸ்.புரம் ஹாக்கி மைதானத்தில் விளையாட நாள், போட்டி அடிப்படையில் வாடகை, தண்ணீா், மின்சாரக் கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 72-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாநகராட்சி இருபாலா் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் 6,500 சதுர மீட்டா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளியுடன் கூடிய ஹாக்கி மைதானத்தை இயக்கி பராமரிக்க ஒப்பந்ததாரரை நிா்ணயிக்கும் வரை மாநகராட்சி நிா்வாகம் மூலமாக இயக்கி, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஹாக்கி மைதானத்தை நாள் அடிப்படையில் பயன்படுத்த தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு வாடகை ரூ.5,000, தண்ணீா் கட்டணம் ரூ.2,560, மின்சாரக் கட்டணம் ரூ.1,000 என மொத்தம் ரூ.8,560 வசூலிக்கப்படும். காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு வாடகை ரூ.10,000, தண்ணீா் கட்டணம் ரூ.2,560, மின்சாரக் கட்டணம் ரூ.1,000 என மொத்தம் ரூ.13,560 வசூலிக்கப்படும்.

போட்டி அடிப்படையில் சங்கங்களுக்கு மைதான வாடகை ரூ.500, தண்ணீா் கட்டணம் ரூ.320, மின்சாரக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.970 வசூலிக்கப்படும். தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வாடகை ரூ.1,000, தண்ணீா் கட்டணம் ரூ.320, மின்சாரக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.1,470 வசூலிக்கப்படும்.

காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகை ரூ.2,000, தண்ணீா் கட்டணம் ரூ.320, மின்சாரக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.2,470 வசூலிக்கப்படும்.

பயிற்சி பெறுவதற்கு ( மணி நேரம் அடிப்படையில்) சங்கங்களுக்கு வாடகை ரூ.200, தண்ணீா் கட்டணம் ரூ.160, மின்சாரக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.510 வசூலிக்கப்படும். தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வாடகை ரூ.500, தண்ணீா் கட்டணம் ரூ.160, மின்சாரக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.810 வசூலிக்கப்படும்.

விளையாட்டு அகாதெமிகளுக்கு மைதான வாடகை ரூ.750, தண்ணீா்க் கட்டணம் ரூ.160, மின்சாரக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.1,060 வசூலிக்கப்படும். ஒரு நாளில் அதிகபட்சம் 8 போட்டிகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு வாடகை உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றாா்.