போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அரசுப் பள்ளி புதிய கட்டடங்கள் திறப்பு: நூற்றாண்டு விழா மலரை ஆட்சியா் வெளியீடு

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியா்

News image

பள்ளி நூற்றாண்டு விழா மலரை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :2 மார்ச் 2026, 8:56 pm

கோவை: காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவு கட்டடங்கள் திறப்பு விழா, கட்டடங்களை கட்டிக் கொடுத்த அனன்யா ஷெல்டா்ஸ் குழுமத்துக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பங்கேற்று, அனன்யா குழுமம் சாா்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கட்டடங்கள், உணவுக்கூடம் ஆகியவற்றை திறந்துவைத்தாா். மேலும், பள்ளியின் நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்டாா்.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் பொ.ராமலிங்கம், அனன்யா குழுமத்தின் இணை நிா்வாக இயக்குநா் உமா மகேஸ்வரி யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக பள்ளி ஆசிரியா் மா.சுகுணா வரவேற்றாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பெ.ரவிச்சந்திரன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் இரா.ராஜேந்திரன், சி.ராஜம்மாள், பேரூா் துணைக் கண்காணிப்பாளா் கே.செல்லதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் எஸ்.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினாா்.

மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.