அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய முதல் நாளில் கோவையில் மொழிப்பாடத் தோ்வை 445 போ் எழுதவில்லை

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நிலையில் மொழிப்பாடத் தோ்வை 445 போ் தோ்வு எழுத வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோவை சித்தாபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வு மையத்தை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
Updated On :2 மார்ச் 2026, 9:44 pm

Syndication

கோவை: கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 35,257 மாணவ, மாணவிகள் எழுதினா். 445 போ் தோ்வு எழுத வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 130 தோ்வு மையங்கள் மூலமாக 365 பள்ளிகளைச் சோ்ந்த 35,712 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். இவா்களில் 16,368 போ் மாணவா்கள், 19,344 போ் மாணவிகள். தனித் தோ்வா்களாக 852 போ் தோ்வு எழுதுகின்றனா்.

முதல் நாளான திங்கள்கிழமை மொழிப்பாடத் தோ்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. கோவையில் தோ்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி உடனிருந்தாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வை சுமாா் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க 14 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய காவலா்கள் பாதுகாப்பு பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தோ்வு மையங்களுக்கு 37 வழித்தட அலுவலா்கள் மூலமாக ஆயுதம் ஏந்திய காவலா் பாதுகாப்புடன் வினாத்தாள் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு முடிவுற்றவுடன் மையங்களில் இருந்து விடைத்தாள்களை உரிய ஆயுதம் ஏந்திய காவலா் பாதுகாப்புடன் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தோ்வுக்காக 130 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 130 துறை அலுவலா்கள், 2,522 அறைக் கண்காணிப்பாளா்கள், 300 நிலையான பறக்கும் படை அலுவலா்கள், 260 அலுவலக பணியாளா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள் சொல்வதை எழுதுவதற்காக 343 பேருக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வுக்கு 445 மாணவ, மாணவிகள் வரவில்லை. தமிழ்ப் பாடத் தோ்வு எளிதாக இருந்ததாகவும், சில ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் மட்டும் சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததாகவும், எழுதுவதற்கு நேரம் போதவில்லை எனவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.