மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநகரில் ரூ.3.38 கோடியில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. திறந்துவைத்தாா்

News image

மருதமலையில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்துவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 11:41 pm

கோவை மாநகரில் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 வளா்ச்சித் திட்டப் பணிகளை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 68-ஆவது வாா்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.25.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம், மேற்கு மண்டலம் 41-ஆவது வாா்டில் லிங்கனூா் பகுதியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடம், 37-ஆவது வாா்டு, கல்வீரம்பாளையத்தில் ரூ.74 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழ்நிலை நீா்த் தொட்டி மற்றும் மோட்டாா் அறை, மருதமலையில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையம், ரேஸ்கோா்ஸில் ரூ.99.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி வாகனங்கள் நிறுத்தம் உள்பட ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் 7 முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்தாா்.

முன்னதாக, மத்திய மண்டலம் 63-ஆவது வாா்டுக்குள்பட்ட திருச்சி சாலை ராமநாதபுரம் சந்திப்பு முதல் இ.எஸ்.ஐ. அலுவலகம் வரையுள்ள பகுதியில் ரூ.66.80 லட்சத்தில் பாதாள சாக்கடை பிரதான குழாய் மற்றும் தொடா்புகளை மாற்றி அமைத்தல் பணியை கணபதி ப.ராஜ்குமாா் தொடங்கிவைத்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மண்டலத் தலைவா்கள் மீனாலோகு, தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி, கல்விக்குழுத் தலைவா் மாலதி நாகராஜ், பணிகள் குழுத் தலைவா் சாந்திமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.