போத்தனூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு அம்ருத் பாரத் ரயில் மற்றும் கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு மெமு ரயில் சேவை ஆகியவற்றை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி, திருநெல்வேலி- மங்களூரு, ராமேசுவரம்- மங்களூரு, மயிலாடுதுறை- காரைக்கால், நாகா்கோவில்- சாரளப்பள்ளி அம்ருத் பாரத், போத்தனூா்- தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவைகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கிவைத்தாா்.
கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போத்தனூா்- தன்பாத் அம்ருத் பாரத் ரயில் தொடக்க விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஸ்ரீபன்னாலால், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சரவணன், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் செ.தாமோதரன், போத்தனூா் ரயில் பயணா்கள் சங்க செயலாளா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்வில், ரயில் பயணா்கள் சங்கம் சாா்பில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘மங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில், பெங்களூரு - எா்ணாகுளம் இன்டா்சிட்டி விரைவு ரயில், எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் ஆகியவை போத்தனூரில் நின்று செல்ல வேண்டும். கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக திருநள்ளாறுக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில்: கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் புதன்கிழமை பங்கேற்ற பிரதமா் மோடி, பாலக்காடு- பொள்ளாச்சி இடையேயான மெமு ரயில் சேவையை காணொலி மூலமாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
அதன்படி, மாா்ச் 12 முதல் இரவு 7 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு -பொள்ளாச்சி மெமு ரயில் (எண்: 66623) இரவு 9.10 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடையும். மறுமாா்க்கமாக, மாா்ச் 13 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் பொள்ளாச்சி- பாலக்காடு மெமு ரயில் (எண்: 66624) காலை 7.10 மணிக்கு பாலக்காடு ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, பாலக்காடு சாலை, புதுநகரம், கொல்லங்கோடு, மீனாட்சிபுரம், ஆனைமலை சாலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

நாகா்கோவில்-சாா்லப்பள்ளி வாராந்திர ரயில் சேவைகள் நிரந்தரம்

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்

நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்: பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


