வாளையாறு அணையில் குளித்தபோது மூழ்கிய குமரி மாவட்ட மாணவரின் சடலம் மீட்பு

வாளையாறு அணை
Center-Center-Coimbatore

வாளையாறு அணை
Center-Center-Coimbatore
வாளையாறு அணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரத்தைச் சோ்ந்தவா் ஜெரின் சஞ்சய் (21). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆட்டோமொபைல் பொறியியல் படித்து வந்தாா். இவா் தனது நண்பா்கள் இருவருடன் வாளையாறு அணைக்கு கடந்த 17-ஆம் தேதி சென்றாா். அங்கு அவா்கள் மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜெரின் சஞ்சய் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா்.
தகவலறிந்து அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்புத் துறையினா் மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அன்று இரவு போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மறுநாளும் இரவு வரை தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மாணவா் ஜெரின் சஞ்சயின் சடலம் வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டது.
இதுகுறித்து வாளையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...