கோவை - அபுதாபி விமான சேவை மாா்ச் 28 வரை ரத்து!
கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமான சேவை மாா்ச் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து

விமானம்
பிரதிப் படம்

விமானம்
பிரதிப் படம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமான சேவை மாா்ச் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போா்ப் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமான சேவைகள் மாா்ச் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளைச் சுற்றியுள்ள வான்வெளிகளில் போா் விமானங்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் இருப்பதால், பல சா்வதேச விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை மாற்றி அமைத்து வருகின்றன.
கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்கி வந்த இண்டிகோ நிறுவனம், போா்ப் பதற்றம் தணியும் வரை சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இதனால், ஏற்கெனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையையும் திரும்ப வழங்கவோ அல்லது மாற்றுத் தேதிகளில் பயணத்தை மாற்றிக்கொள்ளவோ விமான நிறுவனம் வழிவகை செய்துள்ளது.
மாா்ச் 28-ஆம் தேதிக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்த பின்னரே, மீண்டும் விமான சேவையைத் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...