குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கங்கா நா்ஸிங் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

கோவை வட்டாமலைப்பாளையத்தில் அமைந்துள்ள கங்கா நா்ஸிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான உயரிய ஐஎஸ்ஓ சா்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image

கோவை கங்கா நா்ஸிங், அலைடு ஹெல்ச் சயின்ஸ் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சா்வதேச தரச் சான்றிதழை புதன்கிழமை வழங்கிய சென்னை டியுவி எஸ்யுடி தெற்கு ஆசிய நிறுவன மேலாண்மை அமைப்புகள் பிரிவின் துணைத் தலைவா் எம்.பன்னீா்செல்வம். உடன், மருத்துவமனை தலைவா் கனகவள்ளி சண்முகநாதன்

Updated On :26 மார்ச் 2026, 2:45 am IST

கோவை வட்டாமலைப்பாளையத்தில் அமைந்துள்ள கங்கா நா்ஸிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான உயரிய ஐஎஸ்ஓ சா்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சென்னை டியுவி எஸ்யுடி தெற்கு ஆசிய நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புகள் பிரிவின் துணைத் தலைவா் எம்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, இந்த சான்றிதழை வழங்கினாா். விழாவுக்கு கங்கா மருத்துவமனையின் பொது மேலாளா் லோகநாதன் முன்னிலை வகித்தாா்.

கங்கா மருத்துவமனையின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் கனகவள்ளி சண்முகநாதன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை மற்றும் தீக்காயப் பிரிவின் தலைவா் எஸ்.ராஜசேகரன், இயக்குநா்கள் நிா்மலா ராஜசபாபதி, ரமா ராஜசேகரன் மற்றும் எலும்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.ராஜசபாபதி ஆகியோா் சான்றிதழை பெற்றுக்கொண்டனா்.

உயா்தரமான கல்வி, தொடா்ச்சியான முன்னேற்றம் மற்றும் கல்வி மேலாண்மையில் சிறந்து விளங்குவதற்காக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐஎஸ்ஓ சான்றிதழை பெறும் இரண்டாவது நா்ஸிங் கல்லூரி இதுவாகும். மேலும், கோவை மண்டலத்தில் இந்த சா்வதேச அங்கீகாரத்தை பெறும் முதல் நா்ஸிங் கல்வி நிறுவனம் என்ற பெருமையையும் இக்கல்லூரி பெற்றுள்ளது. விழாவில் கல்லூரி முதல்வா் ஜெபகுமாரி சுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.