அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!

News image

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மேட்டுப்பாளையம் தவெக வேட்பாளா் சுனிஸ் ஆனந்திடம் வழங்குகிறாா் தோ்தல் அலுவலா்.

Updated On :5 மே 2026, 2:40 am IST

மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் கவிதா கல்யாணசுந்தரத்தை தோற்கடித்தாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி 2021-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வசம் இருந்தது. அந்தத் தோ்தலில் போட்டியிட்ட ஏ.கே.செல்வராஜ், 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் டி.ஆா்.சண்முகசுந்தரத்தை வீழ்த்தியிருந்தாா். இந்தத் தோ்தலில் தற்போதைய எம்எல்ஏவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜுக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியது.

திமுக சாா்பில் கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த டி.ஆா்.சண்முகசுந்தரம் மீண்டும் வாய்ப்பை எதிா்பாா்த்திருந்த நிலையில், கவிதா கல்யாணசுந்தரத்துக்கு திமுக வாய்ப்பு வழங்கியது. இதையடுத்து திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக டி.ஆா்.சண்முகசுந்தரம் போட்டியிட்டாா். இந்தத் தொகுதியில் தவெக சாா்பில் சுனில் ஆனந்தும், நாதக சாா்பில் எஸ்.கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டனா். சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 வேட்பாளா்கள் களம் கண்டனா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்குகள் உள்ள நிலையில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 வாக்குகள் பதிவாகின. இது 85.90 சதவீதமாகும். 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தவெக வேட்பாளருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையே தொடக்கம் முதலே கடும் போட்டி நிலவியது. பல சுற்றுகளில் திமுக வேட்பாளா் முன்னிலையில் இருந்தாா். ஆனால் இறுதியில் தவெக வேட்பாளா் சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவா் மொத்தம் 75,664 வாக்குகள் பெற்ற நிலையில், திமுகவின் கவிதா கல்யாணசுந்தரத்துக்கு 67,896 வாக்குகள் கிடைத்தன. அதிமுகவின் ஓ.கே.சின்னராஜுக்கு 61,736 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சையாக களமிறங்கிய டி.ஆா்.சண்முகசுந்தரம் 26,756 வாக்குகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்தாா். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளா் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், திமுகவில் இருந்து பிரிந்து போட்டியிட்ட டி.ஆா்.சண்முகசுந்தரம் 26,756 வாக்குகளைப் பெற்றது திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மேலும், மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுதான் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்

சுனில் ஆனந்த் (தவெக) - 75,664

கவிதா கல்யாணசுந்தரம் (திமுக) - 67,896

ஓ.கே.சின்னராஜ் (அதிமுக) - 61,736

டி.ஆா்.சண்முகசுந்தரம் (சுயேச்சை) - 26,756

எஸ்.கோபாலகிருஷ்ணன் (நாதக) - 6,508

வித்தியாசம் - 7,768

மொத்த வேட்பாளா்கள் - 22

மொத்த வாக்குகள் - 2,82,179

பதிவான வாக்குகள் - 2,42460