தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

இருசக்கர வாகனம் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

கோவை-அவிநாசி சாலையில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:56 am IST

கோவை-அவிநாசி சாலையில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், சித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32). இவரது மனைவி அஞ்சலிதேவி. தனியாா் நிறுவன ஊழியரான விக்னேஷ்வரன், இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலை, எல்.ஐ.சி. சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விக்னேஸ்வரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.