திருப்பூா் அருகே சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்த தொழிலாளி, போலீஸ் விசாரணைக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பூா் மாநகா், கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (43). தொழிலாளியான இவா், குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்தாா். இவா்களுக்கு ஆதரவாக இருந்த சக்திவேல், நாளடைவில் அந்தப் பெண்ணுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில் அந்தப் பெண் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல், அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். மேலும், சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சக்திவேலிடம் திருப்பூா் வடக்கு மகளிா் போலீஸாா் சனிக்கிழமை இரவு முதற்கட்ட விசாரணை நடத்தினா்.
அதைத்தொடா்ந்து காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா். இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கும், தண்டனைக்கும் அஞ்சிய சக்திவேல், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து திருப்பூா் வடக்கு போலீஸாா் மற்றும் வடக்கு மகளிா் போலீஸாா் சென்று சக்திவேலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுமியை ஆபாசமாக படம் பிடித்த இளைஞா் கைது
கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் தகராறு: தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

தீப்பற்றிய லாரியை விடியோ எடுத்த இளைஞருக்கு கன்னத்தில் அறை: காவலா் மீது குற்றச்சாட்டு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



