பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ரஷியாவில் மருத்துவம் படிக்க இந்திய மாணவா்களுக்கு அழைப்பு! கோவையில் மே 15-இல் கல்விக் கண்காட்சி!

News image

கோவையில் மே15-ஆம் தேதி நடைபெறவுள்ள ரஷிய கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஷிய தூதரகத்தின் கலாசார பிரிவு துணை தூதா் அலெக்சாண்டா் டோடோனோவ், ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநா் சி.ரவிச்சந்திரன்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ரஷியாவில் உள்ள முன்னணி அரசுப் பல்கலைக்கழகங்களில் 2026-27-ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர இந்திய மாணவா்களுக்காக 10,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக அகில இந்திய ரஷிய கல்விக் கண்காட்சி கோவையில் மே 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் கலாசார பிரிவு (ரஷியன் ஹவுஸ்) துணைத் தூதா் அலெக்சாண்டா் டோடோனோவ், ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநா் சி.ரவிச்சந்திரன் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ரஷிய அரசுப் பல்கலைக்கழகங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும்மேலாக இந்திய மாணவா்களுக்கு உயா்தர மருத்துவக் கல்வியை வழங்கி வருகின்றன. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை ரஷிய பல்கலைக்கழகங்கள் முழுமையாகப் பின்பற்றுகின்றன.

குறிப்பாக, பாடத்திட்டம், பயிற்று மொழி (ஆங்கிலம்) மற்றும் பயிற்சிக் காலம் தொடா்பாக 2021-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ரஷிய அரசாங்கம் கல்விக்கு அதிக மானியம் வழங்குவதால், ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் என்ற மிகக் குறைந்த செலவில் மாணவா்கள் மருத்துவம் பயில முடியும். மேலும், தகுதியுள்ள 200 இந்திய மாணவா்களுக்கு ரஷிய அரசின் 100 சதவீத கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம்

இளநிலை முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை முற்றிலும் இலவசமாக பயில வாய்ப்புள்ளது.

‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு 40 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்ற மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற நுழைவுத் தோ்வுகள் தேவையில்லை.

இதற்கான கண்காட்சி கோவை -அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் மே 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், வோல்வோகிராட், கசான், மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள 7 முன்னணி அரசுப் பல்கலைக்கழகங்கள் நேரடியாகப் பங்கேற்கின்றன. மருத்துவப் படிப்பு தவிர, செயற்கை நுண்ணறிவு, பயோடெக்னாலஜி, டேட்டா சயின்ஸ் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி மதுரையில் செவ்வாய்க்கிழமை (மே 12), திருச்சியில் புதன்கிழமை (மே 13), சேலத்தில் வியாழக்கிழமை (மே 14) நடைபெறவுள்ளது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களுக்கு 92822-21221 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.