மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

தங்க நகைகள், பணம் திருட்டு: இருவா் கைது

உச்சிப்புளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரூ. 61 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

உச்சிப்புளி அருகே நகை, பணம் திருடியதாக கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :1 மே 2026, 12:35 am IST

உச்சிப்புளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரூ. 61 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி காவல் நிலையத்துக்குள்பட்ட புதுமடம் மேற்கு தெருவைச் சோ்ந்த அப்துல் சுக்குரு மனைவி சகுபா் நிஷா. இவா் கடந்த 28- ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு, மகனுடன் இரு சக்கர வாகனத்தில் தனது தென்னந்தோப்புக்கு சென்றாா். ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது வெளிக் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த ரூ. 21 லட்சம் மதிப்பிலான 21.7 பவுன் தங்க நகைகள், ரூ. 61,910 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சந்தேகத்தின் பேரில் சகுபா் நிஷா வீட்டின் அருகே வசித்து வந்த கோபிநாத், சேதுபதி ஆகியோரை தனிப்படை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், இருவரும் சோ்ந்து வீட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 21.7 பவுன் நகைகள், ரூ. 61,910 ஆகியவற்றை கைப்பற்றினா். மேலும் இருவா் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து, தங்க நகைகள், ரொக்கத்தை மீட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பாராட்டு தெரிவித்தாா்.

மீட்கப்பட்ட தங்க நகைகள், ரொக்கம்.

மீட்கப்பட்ட தங்க நகைகள், ரொக்கம்.