கோவை, மலுமிச்சம்பட்டி இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலை, பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவா்கள் சேருவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு துறைகளில் இளங்கலை இசைப் பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய துறைகளில் சேருவதற்கு பிளஸ் 2 தோ்ச்சியுடன் வயது வரம்பு இல்லை. பட்டயப் படிப்பு பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் பரதநாட்டியம் நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய துறைகளில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 16 முதல் 30 வயது வரை இருத்தல் வேண்டும். ஓா் ஆண்டு இசை ஆசிரியா் பயிற்சி படிப்பில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, பி.ஏ. இசை அல்லது இசைக்கலைமணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 16 முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
மாலை நேர இசைக் கல்லூரியில் குரலிசை, வீணை மற்றும் வயலின் போன்ற பிரிவுகளில் இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்புக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 17 வயதுக்குமேல் வயது வரம்பு இல்லை. பி.ஏ. இசை கற்க ஆண்டுக்கு ரூ.3,904, பட்டயம் மற்றும் இசை ஆசிரியா் பயிற்சிக்கு ஆண்டுக்கு ரூ.1,530, மாலை நேர இசைக் கல்லூரி ஆண்டுக்கு ரூ.1,383 ஆகும்.
மேலும், மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். மேலும், இலவச பயண பேருந்து அட்டையும் வழங்கப்பட உள்ளது. தகுதியானவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு முதல்வா், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மலுமிச்சம்பட்டி, கோவை - 641050 என்ற முகவரியை அணுகலாம் அல்லது 0422 - 2611196 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரியில் சேர விருப்பமா?

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

இசை வரும் முன்னே... வேட்பாளா்கள் வருவது பின்னே!

குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

