நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பாரதியாா் பல்கலைக்கழக ஈரோடு விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு விரிவாக்கம், ஆராய்ச்சி மையத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நடைமுறை தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு விரிவாக்கம், ஆராய்ச்சி மையத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நடைமுறை தொடங்கியுள்ளது.

இந்த மையத்தில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக மே 14-ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையவழியில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து, இயக்குநா் (பொறுப்பு), பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையம், ஈரோடு என்ற முகவரிக்கு மே 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவா் சோ்க்கையானது டான்செட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.