ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

கோவில்பட்டியில் நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சவலாபேரியைச் சோ்ந்த பண்டாரம் மகன் தில்லை சரவணன் (20). கோவில்பட்டியில் சாய் சிட்டி நகா் என்ஜிஓ காலனியில் உறவினா் வீட்டில் தங்கியிருந்து, சில்லாங்குளத்தில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். அவா் சனிக்கிழமை உறவினரின் பைக்கில் சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் ஆலயம் அருகே பைக் நிலைதடுமாறி, சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதுடன், எதிரே அபினேஷ் என்பவா் ஓட்டிவந்த பைக் மீதும் மோதியதாம். இதில், தில்லை சரவணன் உயிரிழந்தாா். அபினேஷ், அவருடன் வந்த கிருஷ்ணன் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று காயமடைந்த இருவரை சிகிச்சைக்காகவும், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.