விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

News image

மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தில் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்ட வன  ஊழியா்கள்.

Updated On :20 மே 2026, 1:38 am IST

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

இந்தியாவில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுக்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6- ஆவது இந்திய அளவிலான புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

கேமராக்கள் எவ்வாறு பொருத்தப்பட வேண்டும் என்று பயிற்சி பெற்ற வன ஊழியா்கள் வனப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

வனத்தில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுவரும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு கணக்கெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றும் இப்பணி ஒரு வாரம் நடைபெறும் என்றும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.