கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு வனச் சரகத்தில் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியில் புதன்கிழமை இரவு சிக்கிய சிறுத்தை மீட்கப்பட்டு முதலுதவிக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பக வனத்தில் விடுவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள பொட்டவயல் வெள்ளேரி பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாயின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியிருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத் துறையினா் அங்கு வந்து ஆய்வு செய்தனா். பின்னா் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனா்.
பின்னா் அந்த சிறுத்தை முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அடா்ந்த காட்டுக்குள் விடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வயது மூப்பால் காட்டு யானை உயிரிழப்பு

மகிழ்ச்சியில் காட்டு யானைகள்...

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் யானை உயிரிழப்பு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



