கோவையில் கிளைகளை வெட்டியபோது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, ஆனைக்கட்டி வீரபாண்டி கல்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (63). இவா் பன்னிமடை வீதி கே.வடமதுரையில் உள்ள மின்வாரிய குடியிருப்புப் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும் பழக்கத்தில் யாராவது வேலைக்கு அழைத்தால் சென்று வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி பலத்த காற்று மற்றும் மழை காரணமாக துடியலூா் மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகப் பகுதி வளாகத்தில், மின் கம்பிகளின் மீது மரக் கிளைகள் சாய்ந்தன. இவற்றை வெட்டி அகற்றுவதற்காக ரங்கசாமி, இவரது சகோதரா் காளி உள்ளிட்ட சிலா் அங்கு சென்றனா். மாலை 4 மணியளவில் ரங்கசாமி 10 அடி உயர மரத்தில் நின்று கொண்டு கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி அவா் அங்கிருந்து கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



