கோவை அருகே சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த மே 22-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சூலூா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்தி (33), இவருக்கு உடந்தையாக இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மோகன்ராஜ் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இவா்களில் போலீஸாா் விசாரணையின்போது தப்ப முயன்ற காா்த்தி மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மோகன்குமாா் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி பரிந்துரைத்தாா். அதன்படி, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி) ரம்யா பாரதி பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பினாா்.
இந்த பரிந்துரையை ஏற்ற கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
நெல்லையில் வன்கொடுமை வழக்கு: 4 போ் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


