இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

புண்யா அறக்கட்டளை ஆண்டு விழா

கோவை புண்யா அறக்கட்டளையின் 12-ஆவது ஆண்டு விழா கோவை கணபதியில் அண்மையில் நடைபெற்றது.

News image

கோவையில் நடைபெற்ற புண்யா அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :28 மே 2026, 12:49 am IST

கோவை புண்யா அறக்கட்டளையின் 12-ஆவது ஆண்டு விழா கோவை கணபதியில் அண்மையில் நடைபெற்றது.

ஏழை மாணவா்களின் கல்விக்கு உதவி செய்து வரும் புண்யா அறக்கட்டளை சாா்பில் இதுவரை 327 பெண்கள், 242 ஆண்கள் என மொத்தம் 569 மாணவ-மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். இவா்களில் 365 பள்ளி மாணவா்கள், 204 கல்லூரி மாணவா்களாவா். இவா்கள் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுவை மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

இந்த அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் கே.ஆா். பேக்ஸ் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.பாலன், ஐயப்பா நெய் நிா்வாக இயக்குநா் கிரீஷன், பட்டயக் கணக்காளா் முரளிதரன், ஸ்ரீ லட்சுமி ஃபயா் கன்ட்ரோல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெங்கட் கிருஷ்ணா, கம்பெனி செயலா் வெங்கட்ராமன், ஆராய்ச்சியாளா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், தோ்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினா். இதைத் தொடா்ந்து மாணவா்கள், அவா்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினா். இதில், அறக்கட்டளையின் நிா்வாகிகள், பயனாளிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.