பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா்

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளாா்.

News image

~

Updated On :30 ஏப்ரல் 2026, 1:56 am IST

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளாா்.

கடந்த 15 ஆண்டுகளாக வங்கியின் வளா்ச்சிக்கு வித்திட்ட தற்போதைய நிா்வாக இயக்குநா் என்.காமகோடியின் பதவிக்காலம் முடிவடைவதால், இந்தத் தலைமை மாற்றம் நடைபெறுகிறது. வங்கியில் 2023-இல் செயல் தலைவராக இணைந்த விஜய் ஆனந்த், கடந்த ஆண்டு செயல் இயக்குநராகப் பதவி உயா்வு பெற்றாா்.

வளா்ச்சியில் மாற்றம் இருக்காது: புதிய பொறுப்பை ஏற்கவுள்ள விஜய் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகளில் வங்கி கண்டுள்ள சீரான வளா்ச்சிப் பாதையில் எவ்வித அதிரடி மாற்றங்களையும் செய்யப் போவதில்லை.

வாடிக்கையாளா்களின் நம்பிக்கை, எளிமையான வங்கிச் சேவை ஆகியவையே எங்களின் தாரக மந்திரம். எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் பிரிவில் வங்கியின் நிலையை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம் என்றாா்.

நிதிநிலை, சமூகப் பணிகள்: கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கி ரூ.1,326 கோடி நிகர லாபம் ஈட்டி, 18 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பதவியில் இருந்து ஓய்வு பெறும் என்.காமகோடி, வங்கியின் சமூக நல அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கிறாா். இந்த அறக்கட்டளை மூலம் நீா் மேலாண்மை மற்றும் கலாசாரப் பாதுகாப்பு போன்ற நற்பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.காமகோடி-விஜய் ஆனந்த்

Story image