எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அரசுப் பேருந்து மீது மோதி பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி

News image

கோவை அண்ணா சிலை அருகே பள்ளிச் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

Updated On :31 மே 2026, 1:54 am IST

கோவையில் அரசுப் பேருந்து மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்றது.

கிருஷ்ணகிரியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சனிக்கிழமை அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. கோவை, அண்ணா சிலை சிக்னல் அருகே வந்தபோது, எதிரே காந்திபுரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதி தாறுமாறாக ஓடிய லாரி அப்பகுதியில் இருந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு நின்றது.

பேருந்தில் இருந்த பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். லாரி ஓட்டுநருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.