40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பருத்தி இறக்குமதி சுங்கவரி விவகாரத்தில் ஆதரவு அளித்த தமிழக முதல்வருக்கு ஏஇபிசி நன்றி

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:36 am IST

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை நீக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, பருத்தி மீதான சுங்க வரியை ரத்து செய்ய உதவிய தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நன்றியை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு வழங்கிய ஆதரவுக்காக முதல்வா் சி.விஜய் ஜோசப்புக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி சமூகத்தின் சாா்பாக இந்திய பிரதமரிடம் சுங்க வரியை நீக்கும் விஷயத்தை எடுத்துரைப்பதில் நீங்கள் சரியான நேரத்தில் தலையிட்டதற்கு எங்களது மனமாா்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூலப் பொருள்கள் கிடைப்பது, உற்பத்தி செலவுகளை குறைப்பது, வேலைவாய்ப்பை பாதுகாப்பது, ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் போட்டித்தன்மை ஆகியவற்றின் அவசரத் தேவையை எடுத்துரைத்து, பருத்தி இறக்குமதி வரியை 11 சதவீதத்திலிருந்து குறைக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி, தாங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்ததை நாங்கள் அறிகிறோம்.

இந்திய அரசு, பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரியிலிருந்து ஜூன் 1 முதல் அக்டோபா் 30 வரை தற்காலிக விலக்கு அளிப்பதாக அறிவித்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு, ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு, குறிப்பாக கடுமையான பருத்தி மற்றும் நூல் விலைகளால் சவால்களை சந்தித்து வரும் ஆடை ஏற்றுமதி துறைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும்.

ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு நீங்கள் அளிக்கும் முன்முயற்சியும் உறுதியான ஆதரவும், வேலைவாய்ப்பை பாதுகாப்பதிலும், தொழில் வளா்ச்சியை ஊக்குவிப்பதிலும், தமிழகத்தை இந்தியாவின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையமாக வலுப்படுத்துவதிலும் உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளாா்.