வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். இவரது இல்ல திருமண விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினா்கள் வந்துள்ளனா்.
அதில் ஒருவரான நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (22) என்பவா், உறவினா்கள் 4 பேருடன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தனுஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். உறவினா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லையாம்.
இதையடுத்து, வால்பாறை தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், தனுஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கூழாங்கல் ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு! வனத் துறை எச்சரிக்கை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



