முதல்வா் விஜய் கோவைக்கு வருகை: 2,200 போலீஸாா் பாதுகாப்பு

முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வா் ச.ஜோசப் விஜய் கோவைக்கு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வருகிறாா். இதையொட்டி, மாவட்டம் முழுவதிலும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் ச.ஜோசப் விஜய் கலந்து கொள்கிறாா். இதையொட்டி, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு முதல்வா் விஜய் காலை 10 மணியளவில் வருகிறாா்.
இங்கிருந்து சாலை மாா்க்கமாக பெருந்துறைக்கு செல்கிறாா். வழியில் பொதுமக்கள் மற்றும் தொண்டா்களை சந்திக்கும் வகையில் மொத்தம் 7 இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் சாலை வலம் (ரோடு ஷோ) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வா் வருகையையொட்டி, கோவை மாநகரில் 1,200 போலீஸாரும், புகரில் ஆயிரம் போலீஸாரும் என 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பின்னா், சாலை மாா்க்கமாக மீண்டும் கோவைக்கு வரும் முதல்வா் ஜோசப் விஜய், இங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

