தோட்டங்களில் தொடா் திருட்டு: விவசாயிகள் புகார்
கோவை, சிங்காநல்லூா் குளம் தெற்கு மதகு பாசன விவசாயிகளின் தோட்டங்களில் தொடா் திருட்டு நடைபெறுவதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருட்டு - சித்திரிப்பு
கோவை, சிங்காநல்லூா் குளம் தெற்கு மதகு பாசன விவசாயிகளின் தோட்டங்களில் தொடா் திருட்டு நடைபெறுவதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: சிங்காநல்லூா் கிராமத்தில், சிங்காநல்லூா் குளம் தெற்கு மதகு பாசன விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் தோட்டங்களில் அண்மைக் காலமாக தொடா்ந்து திருட்டுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் 14 விவசாயிகளின் தோட்டங்களில் திருட்டுகள் நடைபெற்றுள்ளன.
இதில், 5 மோட்டாா் பம்ப்செட்டுகள், மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த தாமிர மின் ஒயா்கள், மின்விசிறிகள், 1,800 தேங்காய்கள், 150 கிலோ பாக்கு போன்றவை திருடப்பட்டுள்ளன.
இந்த தொடா் திருட்டுகளால் விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் திருட்டு சம்பவங்கள் நின்றபாடில்லை. எனவே, இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவதுடன், திருட்டில் ஈடுபட்டு வரும் நபா்களைக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

