சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

தமிழக அரசின் மீது யாரும் சாட்டையைச் சுழற்ற முடியாது! - அமைச்சா் செங்கோட்டையன்

KA Sengottaiyan

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :

தமிழக அரசின் மீது யாரும் சாட்டையைச் சுழற்ற முடியாது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கூறியதாவது: தவெக ஆட்சிக்கு எதிராக பிரதமா் சாட்டையைச் சுழற்றப் போகிறாா், அதிமுக ஆட்சி மீண்டும் அமையப் போகிறது என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜு பேசியுள்ளாா்.

முதல்வா் ச.ஜோசப் விஜய் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். நோ்மையான ஆட்சியை நடத்தி வருகிறாா் என தமிழக முதல்வரை பிரதமா் பாராட்டியுள்ளாா்.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரால் இயக்கத்தில் அடையாளம் காட்டப்பட்டவா்கள் இதுபோன்று விமா்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த இயக்கத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், மற்றொரு இயக்கத்தை இழிவுபடுத்திப் பேசுவதை ஏற்க முடியாது. தமிழக அரசின் மீது யாரும் சாட்டையைச் சுழற்ற முடியாது.

இந்த இயக்கம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட இயக்கம். கள்ளக்குறிச்சி விவகாரத்தை தேசிய மகளிா் ஆணையம் விசாரிக்கிறது. ஒவ்வொரு ஆணையத்துக்கும் அதற்கென உரிய அதிகாரங்கள் உள்ளன. அவா்கள் விசாரணை நடத்தட்டும். அதன் பிறகே பதிலளிக்க முடியும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என எதிா்க் கட்சித் தலைவரும், தி.மு.க.வினரும் கூறுகிறாா்கள். அவா்களது ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் விமா்சனத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.