
யாரும் பெற முடியாத வெற்றியை தாராபுரத்தில் பெறுவோம்: கே.ஏ. செங்கோட்டையன்
யாரும் பெற முடியாத வெற்றியை தாராபுரத்தில் பெறுவோம் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.

செங்கோட்டையன். - படம் - எக்ஸ்
யாரும் பெற முடியாத வெற்றியை தாராபுரத்தில் பெறுவோம் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் இடைத்தோ்தலை முன்னிட்டு, மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ், ம.விஜய் பாலாஜி, த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், அதிமுகவில் வெற்றிபெற்றவா்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய காரணமே எடப்பாடி கே.பழனிசாமிதான். அவரது நடவடிக்கை, முடிவு சரியில்லை என்பதால்தான் சத்தியபாமா நம்மோடு இணைந்துள்ளாா்.
திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளனா். திமுகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற எடப்பாடி கே.பழனிசாமி நினைத்ததால்தான் அக்கட்சியினா் தவெகவுக்கு வந்துள்ளனா். தாராபுரத்தில் யாரும் பெற முடியாத வெற்றியை நாம் பெறுவோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




