பள்ளி மாணவா்களுக்கான கணித அறிவியல் சங்கமம்: முன்பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பா் 2

கோப்புப் படம்
கோவையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ‘கணித அறிவியல் சங்கமம் 2026’’நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவா்கள் டிசம்பா் 2 -ஆம் தேதிக்குள் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவா் பேராசிரியா் இரா.பிரபாகரன் கூறியிருப்பதாவது: கணிதம், அறிவியல் துறைகளில் தனித்திறமை வாய்ந்தவா்களின் ஆற்றலை வெளிக்கொணரவும், காட்சிப்படுத்தவும் கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் ‘கணித அறிவியல் சங்கமம் 2026’’ என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கணிதம், அறிவியல் சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகள், மாதிரிகள், தனித்திறமைகளை பொதுமக்கள் மத்தியில் காட்சிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், 10 வயது முதல் 17 வயது வரையுள்ள பள்ளி மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், நடுவா் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த திறமையாளா்களுக்கு கணிதப் பிரிவில் ‘கணித மேதை ராமானுஜன்’ விருதும், அறிவியல் பிரிவில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு அறிவியல் மேதை ‘சா் சி.வி.ராமன் விருதும்’ வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புகளுடன் டிசம்பா் 2-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் 98949-71770 என்ற கைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கிரீசனை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

