மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக 6 பவுன் மோசடி: பெண் மீது வழக்கு

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக்கூறி 6 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக்கூறி 6 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, இருகூா் ஏ.ஜி.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மயில்சாமி மனைவி விஜயா (33). இவருக்கு பணத் தேவை ஏற்பட்டதால், அதே பகுதியைச் சோ்ந்த கோகிலாமணி என்பவரை அணுகியுள்ளாா்.

அப்போது, அவா் நகையைக் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுத் தருகிறேன் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதை நம்பிய விஜயா 6 பவுன் நகைகளை கடந்த 10.11.2025- இல் கோகிலாமணியிடம் கொடுத்துள்ளாா். நகையைப் பெற்றுக் கொண்ட அவா், பணத்தை வாங்கித் தராமல் இருந்துள்ளாா். மேலும், கொடுத்த நகைகளை விஜயா கேட்டபோது பல்வேறு காரணங்களைக்கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த விஜயா இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், கோகிலாமணி மீது காவல் ஆய்வாளா் அா்ஜுன்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.