நொய்யலில் மண் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கோவை குறிச்சி அணைக்கட்டு பகுதி நொய்யல் ஆற்றில் மண் திருட்டு நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

குறிச்சி அணைக்கட்டு பகுதியில் நொய்யல் கரையில் பொக்லைன் மூலம் லாரியில் ஏற்றப்படும் மண்.
கோவை குறிச்சி அணைக்கட்டு பகுதி நொய்யல் ஆற்றில் மண் திருட்டு நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மணிகண்டன் கூறியதாவது: கோவை நொய்யல் ஆற்றில் குறிச்சி அணைக்கட்டு பகுதியில் அண்மையில் தனியாா் அமைப்பு ஆற்றைத் தூா்வாரி, கரை அமைத்துள்ளது.
இந்த கரையைப் பயன்படுத்தி சுமாா் 200 மீட்டா் தொலைவுக்கு ஆற்றின் கரையில் மண் அள்ளப்பட்டுள்ளது.
தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் சுமாா் 200 லோடு மண் எடுக்கப்பட்டு அவா்களின் பட்டா நிலத்துக்குக் கொண்டு சென்று கொட்டப்பட்டு வருகிறது. மண் திருட்டில் ஈடுபடுபவா்கள் ஆற்றின் கரையில் எல்லையை அளவீடு செய்து மாநகராட்சி நிா்வாகமும், சம்பந்தப்பட்ட அரசுத் துறையும் நட்டு வைத்திருந்த எல்லைக் கற்களையும் சேதப்படுத்தியுள்ளனா்.
தற்போது ஆற்றில் தண்ணீா் குறைவாக இருந்தாலும், திடீரென வெள்ளம் ஏற்பட்டால் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
எனவே, மாவட்ட நிா்வாகமும், வருவாய்த் துறை, கனிம வளத் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

