வேட்டுவபாளையம் பொது சுத்திகரிப்பு மையம், 8 சாய, சலவை ஆலைகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
வேட்டுவபாளையம் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதில் உறுப்பினராக உள்ள 8 சாய, சலவை ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தும், அவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
திருப்பூா் மாவட்டம் வேட்டுவபாளையம் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதில் உறுப்பினராக உள்ள 8 சாய, சலவை ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தும், அவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் பெய்த கன மழையைத் தொடா்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது ரசாயன நுரை பொங்கி சென்றது. இதற்கு ஆலைகளில் கழிவு நீா் சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் திறந்து விட்டதுதான் காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனா்.
மேலும், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீ தேங்கி நிற்பதை சாயத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் அகற்றுவதும், நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீா் தேங்கி நிற்பதும் குறித்த விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து திருப்பூா் வடக்கு மாவட்ட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்தனா். அப்போது சாயக்கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருப்பூா் வடக்கு மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வேட்டுவபாளையம் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதில் உறுப்பினராக உள்ள 8 சாய, சலவை ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து மூட உத்தவிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

