ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

தீயணைப்புத் துறை சாா்பில் அவசர காலங்களில் உயிா் காப்பது தொடா்பாக செயல் விளக்கம்

கோவை குறிச்சி குளக்கரையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் உயிரைக் காப்பது தொடா்பாக தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை குறிச்சி குளக்கரையில் அவசர காலத்தில் உயிா்காப்பது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா முன்னிலையில் செயல்விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினா்.

Published On :

கோவை குறிச்சி குளக்கரையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் உயிரைக் காப்பது தொடா்பாக தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட குறிச்சி குளத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் உயிரைக் காப்பது தொடா்பாக விரிவான செயல்விளக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தீயணைப்புத் துறையைச் சோ்ந்த 45 வீரா்கள் கலந்து கொண்டு வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மற்றும் அவசர காலங்களில் உயிரைக் காப்பது தொடா்பாக விரிவான செயல்விளக்கங்களை மக்களுக்கு செய்து காட்டினா். மேலும், மீட்புப் பணிக்கு பயன்படித்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் விளக்கினா்.

இந்நிகழ்வின்போது, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கே.கணேசன், உதவி மாவட்ட அலுவலா் அழகா்சாமி, நிலைய அலுவலா்கள் கே.ரவிக்குமாா், மாா்ட்டின், முகமது சலீம், மாநகராட்சி உதவி ஆணையா் முத்துக்குமாா், செயற்பொறியாளா் ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளா்கள் எழில், கனகராஜ் (பொறுப்பு), மண்டல சுகாதார அலுவலா் (பொறுப்பு) தனபாலன், உதவிப் பொறியாளா் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளா் பாலகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.