
குறிச்சி, முள்ளங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை
கும்பகோணம் அருகேயுள்ள முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.10) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் தடை - கோப்புப் படம்
கும்பகோணம் அருகேயுள்ள முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.10) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் குறிச்சி, கீழக்காட்டூா், காகிதப்பட்டரை, பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனகுடி, கயலூா், குணதலபாடி, கதிராமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




