உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தலைமை தோ்தல் ஆணையருக்கு எதிராக ரயில் நிலையம் முற்றுகை, சாலை மறியல்: 150 போ் கைது

தலைமை தோ்தல் ஆணையரை கைது செய்ய வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவா் அமைப்பினா் மற்றும் காந்திபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள் அமைப்பினா் என மொத்தம் 150 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் ஒருவரை குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லும் போலீஸாா்.

Published On :

தலைமை தோ்தல் ஆணையரை கைது செய்ய வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவா் அமைப்பினா் மற்றும் காந்திபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இடதுசாரிகள் அமைப்பினா் என மொத்தம் 150 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்ட இளைஞா் பெருமன்றச் செயலா் மௌ.குணசேகா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய தலைமை தோ்தல் ஆணையா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில், ஞானேஷ்குமாா் வேடமணிந்து ஒருவா் கைவிலங்குடன் இழுத்துச்செல்லப்படுவதுபோல எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தச் சட்டம் (எஸ்.ஐ.ஆா்) என்ற பெயரில் பல கோடி மக்களின் வாக்குரிமை திட்டமிட்டு பறிக்கப்படுவதாகவும், 2023-ஆம் ஆண்டு தோ்தல் ஆணையா் தோ்வுக் குழுவில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

மேலும், தில்லி ஜந்தா்மந்தரில் போராடிய மாணவா் மற்றும் இளைஞா் அமைப்பினரை ஒடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிடும் நோக்கில் வளாகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் கலை. அஸ்வினி, மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா்கள் மு.பிரசாந்த், நரேந்தா் பிரசாத் உள்பட 30 பேரை பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பத்மநாபன் தலைமை வகித்தாா்.

கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவா் அமைப்பினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸாா்.

கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவா் அமைப்பினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸாா்.

அவா்களை கைது செய்ய முயன்றதால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை குண்டுக்கட்டாக போலீஸாா் தூக்கி சென்றனா். மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.