தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

அடகு நகையை மீட்க உதவி கோரி ரூ.76 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்ட 710 கிராம் தங்க நகைகளை மீட்க உதவி கோரி, மற்றொரு நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்தவா் ஹரிஹர சுப்பிரமணியம் (53). இவா் சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் பிற நிறுவனங்களில் வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்துள்ள நகைகளை மீட்டு, தனது நிறுவனத்தில் அடமானம் வைக்கும் தொழிலையும் செய்து வருகிறாா்.

இந்நிலையில், வீரகேரளத்தைச் சோ்ந்த கேசவராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோா் ஹரிஹர சுப்பிரமணியத்தை அணுகியுள்ளனா். தங்களுக்குச் சொந்தமான 710 கிராம் நகைகள் தனியாா் அடகு நிறுவனத்தில் இருப்பதாகவும், அதை மீட்டு ஹரிஹர சுப்பிரமணியத்தின் நிறுவனத்தில் வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய அவா் ஆா்டிஜிஎஸ் வங்கிப் பரிவா்த்தனை மூலமாக கேசவராஜின் வங்கிக் கணக்குக்கு ரூ.76 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட தம்பதி நகைகளை மீட்டு ஒப்படைக்காமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் இழுத்தடித்து வந்துள்ளனா். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஆபாச வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி காவல் ஆய்வாளா் ராஜசேகா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள தம்பதியைத் தேடி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.