தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஜிஎஸ்டி ஏய்ப்பு: தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாக திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த தொழிலதிபதிருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாக திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த தொழிலதிபதிருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்தவா் வடிவேல் ஜெயச்சந்திரன். தொழிலதிபரான இவா், கொப்பரை, மரம், பருத்திப் பொருள்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறாா்.

இவா், தனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, பொருள்களை விற்காமல் போலி பில்கள் தயாரித்து ரூ.12 கோடியே 82 லட்சத்து 4 ஆயிரத்து 299-க்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், இதுதொடா்பான வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமாா், வடிவேல் ஜெயச்சந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அபராதத் தொகையை செலுத்த தவறினால் ஓா் ஆண்டு கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.