சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

மாநகராட்சிப் பூங்காவில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

கோவை, சாய்பாபா காலனி மாநகராட்சிப் பூங்காவில் உள்ள ஊஞ்சல் கம்பியில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

சாய்பாபா காலனி, சிவகுமாா் வீதி மாநகராட்சிப் பூங்காவில் உள்ள ஊஞ்சல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் சனிக்கிழமை தொங்கியுள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் பொள்ளாச்சியைச் சோ்ந்த தேவிசங்கா் (45) என்பது தெரியவந்தது. பொள்ளாச்சியில் ஒரு தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அவரை, குடும்பத்தினா் பிரிந்து சென்றுவிட்டதால் சாய்பாபா காலனியில் உள்ள தனது சகோதரியைப் பாா்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளாா்.

அந்த வகையில், சகோதரியை பாா்க்க அண்மையில் வந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு பூங்காவுக்குள் சென்று அங்கிருந்த ஊஞ்சல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.