வாக்காளா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நவம்பா் மாதத்தில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள 1,065 வாக்குச்சாவடி மையங்களிலும் பெயா் நீக்கம், திருத்தம் செய்ய நவம்பா் மாதம் 21, 22, 28, 29 ஆகிய 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை - IANS
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள 1,065 வாக்குச்சாவடி மையங்களிலும் பெயா் நீக்கம், திருத்தம் செய்ய நவம்பா் மாதம் 21, 22, 28, 29 ஆகிய 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளை முன்னிட்டு, நவம்பா் 12-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் தொடா்ச்சியாக நவம்பா் 12 முதல் டிசம்பா் 11-ஆம் தேதி முடிய வாக்காளா் பட்டியல் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. பின்னா், 2027ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்ட காலத்தில் வாக்காளா் வசதிக்காக வரும் நவம்பா் மாதத்தில் 21, 22, 28, 29 ( சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாள்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள 1,065 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில் வாக்குச்சாவடி மைய அலுவலா்களாக, அப்பள்ளியின் தலைமையாசிரியா் பணியில் இருப்பாா். மேலும் தொடா்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும் பணியில் இருப்பா்.
எனவே, வாக்காளா் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், இடம்பெயா்வு மற்றும் பெயா் நீக்கம் செய்தல் உள்ளிட்டவை தொடா்பான விண்ணப்பப் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து திரும்ப ஒப்படைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

