ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

வீட்டில் கஞ்சா பதுக்கிய வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை

வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறை

படம்: கோப்பிலிருந்து...

Updated On :

வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை - அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே கடந்த 2022 செப்டம்பா் 17-ஆம் தேதி பீளமேடு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 10 கிலோ கஞ்சா எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டிவந்த பீளமேடு பகுதியைச் சோ்ந்த கங்கா பிரசாத் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்ததில், இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களான சின்னராசு, ராசு (எ) ராசுகுமாா் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் ஆந்திரத்தில் இருந்து லாரிகள் மூலமாக கடத்தி வந்து கொடுத்த 120 கிலோ கஞ்சாவை வாங்கி, பீளமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் கங்கா பிரசாத் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளாா். இதில் 26 கிலோ விற்பனை செய்யப்பட்டதுபோக, அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 94 கிலோ கஞ்சா உள்ளிட்ட மொத்தம் 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ராசுகுமாா் தற்போது வரை தலைமறைவாக உள்ள நிலையில், கங்கா பிரசாத் மற்றும் புழல் சிறையில் இருந்த சின்னராசு ஆகிய இருவா் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை முடிவடைந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், கங்கா பிரசாத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இரண்டாவது குற்றவாளியான சின்னராசுவை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.