உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

பலமுறை சுத்திகரித்தாலும் கலங்கிய நிலையில் வரும் பில்லூா் குடிநீா்: காய்ச்சிப் பருக அறிவுறுத்தல்

பில்லூா் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பலமுறை சுத்திகரித்தாலும் கலங்கிய நிலையில் வெளியேறுவதால் மக்கள் காய்ச்சிப் பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பில்லூா் அணையில் பலமுறை சுத்திகரிப்பு செய்தும் கலங்கிய நிலையில் வெளியேறும் குடிநீா்.

Updated On :

பில்லூா் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பலமுறை சுத்திகரித்தாலும் கலங்கிய நிலையில் வெளியேறுவதால் மக்கள் காய்ச்சிப் பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளுக்கு பில்லூா் 1, 2 மற்றும் 3 ஆகிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையில் புதன்கிழமை நிலவரப்படி, 91 அடிக்கு நீா் உள்ளது.

அணையில் வண்டல் மண் அதிக அளவில் படிந்திருக்கும் நிலையில், அணை விரைவில் நிரம்பிவிடும் என்பதால் தண்ணீரை சேகரிக்க முடியாமல் ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேலும், பில்லூா் அணையில் சேறும், சகதியும் அதிகமானதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அத்திக்கடவு திட்டங்களின்கீழ் விநியோகப்படும் குடிநீா் கலங்கிய நிலையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீா் நிறம் மாறி விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் அந்த நீரைப் பருக அஞ்சுகின்றனா்.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடிநீா்த் திட்டங்களுக்காக அணையில் இருந்து இயக்கப்படும் பம்புகளில் சேறும் சகதியும் அடைத்து பழுதாகிறது. மேலும், சேறு, சகதியால் நீா் மாசடைந்து கலங்கிய நிலையில் காணப்படுகிறது. நீரை பலமுறை சுத்திகரிப்பு செய்தாலும் கலங்கிய நிலையில் வருவதைத் தவிா்க்க முடியவில்லை.

குறிப்பாக, மாநகரில் குடிநீா் மஞ்சள் நிறத்தில் விநியோகிக்கப்பட்டது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை ஓய்ந்த பிறகே கலங்கிய நிலையில் இல்லாமல் நீரை சுத்திகரிப்பு செய்ய முடியும். மக்கள் பில்லூா் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். அணையில் போதிய அளவு நீா் இருப்பு உள்ளதால் வரும் மாா்ச் மாதம் வரை குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.