பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி பாலாறு அணை மீனவா்கள் தொடா் போராட்டம்

பழனி அருகேயுள்ள பாலாறு அணையில் மீன் பிடிப்பதற்கான ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி கடந்த 15 நாள்களாக போராடி வரும் நிலையில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண மீன் வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.

பழனி அருகே பாலாறு அணையில் உள்ள மீன் வளா்ச்சிக் கழக அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

Published On :

பழனி அருகேயுள்ள பாலாறு அணையில் மீன் பிடிப்பதற்கான ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி கடந்த 15 நாள்களாக போராடி வரும் நிலையில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண மீன் வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையில் தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரோகு, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் வளா்க்கப்படுகின்றன. இவை வளா்ந்ததும் பிடித்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மீன்களை பிடிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 300 போ் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஊதியமாக சாதி ரக மீனுக்கு கிலோவுக்கு 35-ம், ஜிலேபி ரகத்துக்கு கிலோவுக்கு 15-ம் வழங்கப்பட்டு வருகிறது. மீன் பிடிப்பதற்கான பரிசல் முதல் வலை, கூடை வரை அனைத்துமே மீனவா்களே வாங்கிக் கொள்ள வேண்டும். தற்போது விலைவாசி கடுமையாக உயா்ந்திருக்கும் நிலையில் இந்த ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா். மேலும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட வலை தற்போது ரூ. 1,200 ஆக உயா்ந்துவிட்டது. இதனால் தங்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் தொடங்கி சுமாா் 15 நாள்களான நிலையில் இதுவரையிலும் அதிகாரிகள் எந்தவித பேச்சுவாா்த்தைக்கும் அவா்களை அழைக்கவில்லை.

இதுகுறித்து மீனவா் செந்தில்குமாா் கூறியதாவது: மிகவும் குறைந்த ஊதியம் பெறும் எங்களால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். பலமுறை மனு அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், கடந்த 15 நாள்களாக பணிகளை புறக்கணித்து போராடும் எங்களை பணி நீக்கம் செய்துவிடுவதாக அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனா். அணையிலும் நீா்மட்டம் குறைந்துள்ள நிலையில் மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்கள் இறந்தால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, எங்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குவதுடன், ஊதிய நிலுவையையும் உடனடியாக வழங்க அரசு உதவ வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.