நாமக்கல் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக். 25) குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பிரதிப் படம்
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக். 25) குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு ஜேடா்பாளையம் குடிநீா் திட்டத்தின் மூலம் தினசரி 18 மில்லியன் லிட்டா் (எம்எல்டி) குடிநீா் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பெய்துவரும் பருவமழையின் காரணமாக கபிலக்குறிச்சி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் இணைப்பில் ஏற்பட்ட உயா் மின்னழுத்ததால் இரண்டு மின்மோட்டாா்களும் பழுதடைந்துள்ளன.
இதனால், தற்போது ஒரு மின்மோட்டாா் மட்டுமே இயங்கி வருகிறது. தினசரி 8 மில்லியன் லிட்டா் குடிநீா் மட்டுமே பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், மோட்டாா் சீரமைக்கும் பணி போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, மாநகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சீரான குடிநீா் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

