வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

குழிக்குள் தவறி விழுந்த யானை மீட்பு

தனியாா் தோட்டத்தில் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் மீட்டனா்.

குழியில் விழுந்து மீண்டும் மேலே வர முயற்சிக்கும் யானை.

Updated On :

தனியாா் தோட்டத்தில் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் மீட்டனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இரவு நேரங்களில் சாலையில் யானைகள் உலவி வருவது வழக்கமாக உள்ளன.

இந்நிலையில் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள பட்டத்தூா் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தோட்டம் வழியாக வியாழக்கிழமை யானைகள் கூட்டமாக சென்றன. இதில், ஒரு யானை கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்தது.

தகவலறிந்து கேரள வனத் துறையினா் சென்று நீண்ட நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலமாக யானையை மீட்டனா். குழியில் விழுந்தது சுமாா் 6 வயதுடைய ஆண் யானை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.