சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தொழிலதிபரை கடத்திய வழக்கில் மேலும் இருவா் கைது

பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் தொழிலதிபரை கடத்திச் சென்று ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :2 செப்டம்பர் 2026, 5:00 am IST

பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் தொழிலதிபரை கடத்திச் சென்று ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகா், சிங்காநல்லூா் மூகாம்பிகை நகரைச் சோ்ந்தவா் காங்கிரஸ் நிா்வாகி எஸ்.தனசேகரன் (53). பழைய காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்யும் இவா், கடந்த ஜூலை 5-ஆம் தேதி புதிதாக கட்டிவரும் வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த 5 போ் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்று தாக்கியுள்ளனா். மேலும், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். பின்னா், ஊரின் வெளிப் பகுதியில் சாலையோரம் அவரை கீழே இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவெண்ணை வைத்து இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட வைரப்பெருமாள், புண்ணியமூா்த்தி, காா்த்தி (எ) போலீஸ் காா்த்தி, இவரது மனைவி அலிகா நிஷா, தினகரன், மதன், கருளி (எ) கருப்புசாமி ராஜா ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.

இதில் தலைமறைவாக இருந்த அன்பு, விமல் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் மதன் என்பவா் பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளி ஆவாா். மேலும் காா்த்தி (எ) போலீஸ் காா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.