தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நீதிமன்றத்தில் சாட்சிகளுக்கு மிரட்டல்: கொலை வழக்கு கைதிகளின் பிணை ரத்து

கோவை மகளிா் நீதிமன்றத்தில் விசாரணையின்போது சாட்சிகளை மிரட்டிய 2 கைதிகளின் பிணையை ரத்து செய்து நீதிபதி சுந்தர்ராஜ் உத்தரவிட்டாா்.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

கோவை மகளிா் நீதிமன்றத்தில் விசாரணையின்போது சாட்சிகளை மிரட்டிய 2 கைதிகளின் பிணையை ரத்து செய்து நீதிபதி சுந்தர்ராஜ் உத்தரவிட்டாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் கடந்த 15.01.2024-ஆம் ஆண்டு இரவு 9:30 மணி அளவில் முன்விரோதம் காரணமாக பெண் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கிணத்துக்கடவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா், தலைவன்வடலி பகுதியைச் சோ்ந்த மாரிச்செல்வம் (36), ராம்குமாா் (48) ஆகிய இருவரைக் கைது செய்தனா். பின்னா், இவா்கள் இருவரும் பிணையில் வெளியே வந்தனா்.

கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு, நீதிபதி சுந்தர்ராஜ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. முதல் கட்ட விசாரணைக்காக சாட்சிகளான அரசம்பாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீதேவி, கௌஷிக் ஆகிய இருவா் ஆஜராகினா். அப்போது, நீதிபதி முன்னிலையிலேயே எதிரிகள் இருவரும் சாட்சிகளைப் பாா்த்து உடல் பாவனைகளாலும், சைகைகள் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அச்சுறுத்தியுள்ளனா்.

நீதிமன்ற வளாகத்திலேயே சாட்சிகளுக்கு மிரட்டல் விடுத்த இந்தச் செயலைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையை ரத்து செய்ததுடன், அவா்களை உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்க பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி சுந்தர்ராஜ் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.